ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற கென்னடி என்பவருக்குச் விசைப் படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மார்ச் 19-ல் சிறைப்பிடித்தனர். படகுகளிலிருந்த சங்கர், அர்ஜுனன், தர்ம முனியாண்டி ஆகிய 03 மீனவர்கள் மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களின் காவல் புதன்கிமையோடு நிறைவடைந்ததை தொடர்ந்து, 3 மீனவர்களும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நளினி சுபாஸ்கரன் 3 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்து உத்தரவிட்டார். பின்னர், விடுதலை செய்யப்பட்ட 3 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதராகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு கடந்த வாரம் தமிழக மீனவர்கள் 11 பேர் தண்டனை மற்றும் அபதராமின்றி விடுதலை செய்திருந்த நிலையில், மேலும் 3 மீனவர்கள் விடுதலை செய்திருப்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *