ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு 26 அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் (ஏப்.23), பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பணியமர்த்தப்பட்ட 40 வயதான எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான பூர்ணம் குமார் ஷா தற்செயலாக எல்லையைக் கடந்தார். அவர், சர்வதேச எல்லையை தவறுதலாக தாண்டியதால் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இரு நாடுகள் இடையே தாக்குதல் நடைபெற்ற நிலையில், இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போனது. இந்த நிலையில், அவர் இன்று, அதாவது கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பிறகு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 10.30 மணியளவில் அமிர்தசரஸில் உள்ள கூட்டுச் சோதனைச் சாவடி அட்டாரி வழியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த ஒப்படைப்பு அமைதியாகவும் நிறுவப்பட்ட நெறிமுறைகளின்படியும் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *